மீனுடன் புகைப்படம் எடுத்த இருவர் கைது

நட்சத்திர மீனுடன்  செல்பி எடுத்த சீன சுற்றுலா வாசிகள் இருவர்  கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட  விநோத சம்பவம் தாய்லாந்தில்  இடம்பெற்றுள்ளது.

குறித்த சுற்றுலாவாசிகள் நட்சத்திர மீன்களைக் கையில் பிடித்து அதனுடன் புகைப்படம் எடுத்து அதனை இணையத்தில் வெளியிட்டுள்ள நிலையிலேயே இவ்வாறு தாய்லாந்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் .

தாய்லாந்து அரசு இயற்கை வளங்களைப்  பாதுகாக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. குறிப்பாக  பவள பாறைகள் மற்றும் அழியக்கூடிய சூழலில் வாழும்  கடல் வாழ் உயிரினங்களைப்  பாதுகாப்பதற்காக கடுமையான சட்டங்களை அமுல் படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தகக்து.

Leave a Reply