தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிரான தொடர் போராட்டம் ஆரம்பம்! samugammedia

சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள காங்கேசன்துறை – திஸ்ஸ விகாரைக்கு எதிரான தொடர் போராட்டம் இன்றையதினம் மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.

நாளையதினம் போயா தினம் என்பதால் குறித்த விகாரையில் வழிபாடுகள் இடம்பெறவுள்ள நிலையில் குறித்த போராட்டம் இன்றையதினம் ஆரம்பமாகியுள்ளது. இந்த போராட்டமானது நாளையதினமும் தொடரவுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் பதாகைகளை ஏந்தி கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

இந்த போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரரும் நாடாளுமன்ற உறுப்பினராமான செல்வராஜா கஜேந்திரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட சட்டத்தரணியுமான கனகரத்தினம் சுகாஸ், கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அந்தவகையில் இந்த போராட்டத்திற்கு வலுச் சேர்ப்பதற்கு சமூக அக்கறையுள்ள அனைத்து அனைவரையும் அழைத்து நிற்கின்றனர் ஏற்பாட்டாளர்கள்.

Leave a Reply