வவுனியாவில் முக்கிய இடத்தில் சிக்கிய இளம் யுவதிகள்..!பொலிஸார் அதிரடி..!samugammedia

வவுனியா ஏ9 வீதி மூன்று முறிப்பு பகுதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் பாலியல் தொழில் இடம்பெறுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் வவுனியா தலைமை பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் ஜெயக்கொடியின் தலைமையில் நீதிமன்ற அனுமதி பெற்று மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது 20 வயதுடைய இளம் பெண் உட்பட நால்வரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதன் போது பாலியல் தொழிலில் ஈடுபட்டனர் எனும் குற்றச்சாட்டில் விடுதியில் தங்கியிருந்த  20, 34 வயதுடைய இரு பெண்களும் , போதைப்பொருள் பாவித்திருந்தமையுடன் விபச்சாரத்திற்கு உடந்தையாக செயற்பட்டனர் எனும் குற்றச்சாட்டில் இரு ஆண்கள் என நால்வரை வவுனியா பொலிஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நால்வரின் மருத்துவ அறிக்கைகள் பெறப்படவுள்ளமையுடன் மேலதிக விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்ட நால்வரையும் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆயர்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்

Leave a Reply