கல்முனை யங் பேர்ட்ஸ் ஜனாஸா நலன்புரி அமைப்பின் வாகன கொள்வனவுக்கு நிதி அன்பளிப்பு..!samugammedia

கல்முனை யங் பேர்ட்ஸ் ஜனாஸா நலன்புரி அமைப்பின் தேவையாக இருந்த வாகனம் ஒன்றை கொள்வனவு செய்வதற்கான ஆரம்பகட்ட நிதியினை “கல்ப் பெடெறேசன் கல்முனை” அமைப்பின்  ஊடாக அதன் பிரதிநிதி எஸ்.எல்.பைறூஸினால்  யங் பேர்ட்ஸ் ஜனாஸா நலன்புரி அமைப்பிற்கு உத்தியோகபூர்வமாக  வழங்கி வைக்கப்பட்டது.

அமைப்பின் தலைவர் முஹம்மட் மர்சூக் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு கௌரவ அதிதியாக  கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாகத் அலி கலந்து கொண்டார்.
இவரது பங்குபற்றுதலுடன் இந்நிகழ்வு கல்முனை யங் பேர்ட்ஸ் ஜனாஸா நலன்புரி அமைப்பின் காரியாலயத்தில் இடம்பெற்றது.

Leave a Reply