8 மாதத்துக்கு முன்பு மாயமான சிறுமி..! காதலனுடன் கண்டுபிடிப்பு..!samugammedia

கடந்த 8 மாதங்களுக்கு முன்பு காணாமல் போன 14 வயதுடைய சிறுமியொருவர் பேலியகொட பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமி பேலியகொட பகுதியில் தனது 22 வயது காதலனுடன் தங்கியிருந்த நிலையில் பேலியகொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர்கள் நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்ட நிலையில், நேற்று லுணுகலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இந் நிலையில் இருவரையும் பதுளை  நீதிவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையினை லுணுகலை பொலிஸார் மேற்கொண்டிருந்தனர்.

லுணுகல சூரியகொட பகுதியைச் சேர்ந்த குறித்த காணாமல் போனதாக அவரது பெற்றோரால் கடந்த டிசம்பர் மாதம் 24 ஆம் திகதி லுணுகல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தமையும் குறிப்படத்தக்கது.

Leave a Reply