திடீர் சுற்றிவளைப்பில் சிக்கிய விபசார அழகிகள்..! samugammedia

இரத்மலானை பிரதேசத்தில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் நடத்தப்பட்ட இரண்டு விபச்சார விடுதிகள் (07) சுற்றிவளைக்கப்பட்டது.

அங்கு, அந்த விபச்சார விடுதிகளின் நிர்வாகத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவரும் விபச்சாரத்தில் ஈடுபட்ட ஐந்து சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 23 மற்றும் 39 வயதுடைய கட்டுகஸ்தோட்டை, நுகேகொட, நாகொல்ல, பத்தேகம மற்றும் கெக்கிராவ பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply