எச்.ஐ.வி அபாயத்தைக் குறைப்பதற்கான இலவச மருந்துகளை வழங்கும் விசேட மருத்துவமனையானது மாதத்தின் ஒவ்வொரு இரண்டாவது வாரமும் ஞாயிற்றுக்கிழமையன்று கொழும்பு செரெம் பிளேஸில் அமைந்துள்ள எஸ்.டி.டி மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டுப் பிரிவினால் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நோயினால் பாதிக்கப்பட்டள்ள நபர்களின் தனியுரிமை அதிகபட்சமாக பாதுகாக்கப்படுவதோடு அவர்களின் அடையாளம் வெளிப்படாது என பால்வினை நோய்கள் மற்றும் எயிட்ஸ் தடுப்புக்கான தேசிய வேலைத்திட்டத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஜானகி விதானபத்திரன தெரிவித்தார்.




