களத்தில் இறங்கி போராடும் தமிழ் அரசியல் தலைவர்களை அச்சுறுத்தும் அரசு..! தம்பிராசா காட்டம்..!samugammedia

தொழிலார்களிற்கு எதிராக  சட்டத்தை உருவாக்கி அவர்களை நிர்கதி நிலைமைக்கு அரசாங்கம் தள்ளுமானால் அடக்கு முறைக்கு எதிரான ஜனநாயக அமைப்பு அவர்களின் நலன்களை முன்னிறுத்தி வீதியில் இறங்கி போராடும் என அதன் தலைவர் மு.தம்பிராசா தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

ஏற்கனவே அரசாங்கம் ஊடகங்களிற்கு எதிரான சட்டத்தினை கொண்டு வந்து ஊடக நிறுவனத்தை அடக்கி ஆழ முனையும் அதேவேளை பயங்கரவாத தடை சட்டத்திற்கு இணையான மற்றும் அதையும் விட  மேலதிகமான சட்டத்தினை கொண்டு வந்து மக்களையும் அடக்கி ஆழ முனைகின்றது.

தொழிலார்களிற்கு எதிராக முன்னதாகவே,  அவர்களின் இ.பி.எப், இ.ரி.எப் தொடர்பான பானங்கள், வட்டி வீதங்கள் அனைத்தும் முரண்பட்டு அனைவரும் அதிருப்தியடைந்திருக்கும் சூழலில் தொழிலார்களிற்கு எதிரான ஒரு சட்டத்தை கொண்டு வந்து நிர்கதிக்கு தள்ளுமானால் அடக்கு முறைக்கு எதிரான ஜனநாயக அமைப்பு அவர்களின் நலன்களை முன்னிறுத்தி வீதியில் இறங்கி போராடும்.

தமிழினத்தின் பிரச்சினைகளை கடந்த சுதந்திர தினத்திற்கு முன்னதாக தீர்த்து வைப்பதாக உறுதி கூறிய ஜனாதிபதி, அடுத்த சுதந்திர தினமும் வரவுள்ள நிலையில் அதனை தீர்த்து வைப்பர் என்ற நம்பிக்கை எமக்கில்லை.

ஜனாதிபதி, ஒரு சில அரசியல் கைதிகளை பொது மன்னிப்பின் பெயரில் விட முனையும் அதே வேளை ஐக்கிய நாடுகள் சபையை ஏமாற்றுவதற்காக ஓரிரு அரசியல் கைதிகளை விட்டு, தமிழரசு கட்சியை அழைத்து  கதைப்பதாக நாடகமாடுகின்றார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் மீது, திலீபனின் நினைவு தினத்திற்கு விளக்கு கொளுத்தியதற்காக பயங்கர வாத தடை சட்டத்தின் கீழ் ஒரு வழக்கை போட்டு
 சிவாஜிலிங்கத்தின் நின்மதியை கெடுத்து அவரை அவல  நிலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.  

சிவாஜிலிங்கத்திற்கு எதிராக பயங்கர வாத தடை சட்டத்தின் ஊடாக வழக்கை பதிவு செய்துள்ள இந்த விடயத்தை ஜனாதிபதியுடன் கதைத்து அதை ரத்து செய்ய முயல வேண்டும்.

இவ்வாறு செய்வதன் ஊடக போராடும் சக்திகளை அச்சுறுத்தி போராட்ட களத்திலிருந்து விரட்ட முன்வருகின்றனர்.

வடக்கு , கிழக்கு, மலையக தொழிலாளர்கள் படுகின்ற துன்பம் கொஞ்சமல்ல. தனியார் துறை தொழிலாளர்களிற்கு கொரோனாவிற்கு பின் எந்தவிதமான கொடுப்பனவும்  வழங்கப்படவில்லை.

கொரோனாவிற்கு முன் 3 நேரங்களும் உண்டவர்கள் மானத்தை காப்பதற்காக வயிற்றை கட்டி வாழும் அவர்களிற்காக தனியார் முதலாளிகளும் அக்கறை கொள்ளவில்லை என தெரிவித்தார்.

Leave a Reply