அடிப்படை வசதிகளின்றி வாழும் நுவரெலியா பம்பரகலை தோட்ட மக்கள்! samugammedia

நுவரெலியா மாவட்டம் நுவரெலியா பம்பரகலை தோட்டத்தில் சுமார் 25 குடும்பங்கள் தற்காலிக வீடுகளில் எவ்வித வசதிகளும் இன்றி வாழ்ந்து வருகின்றனர்.

ஒரு சில வீடுகளில் மின்சாரம் கூட இல்லாத நிலையில் காணப்படுகிறது.

நுவரெலியா பம்பரகலை பிரிவுக்கு பொருப்பான அபிவிருத்தி உத்தியோகத்தர்,  கிராம உத்தியோகத்தர் இது சம்பந்தமாக மத்திய  மாகாண ஆளுநர்,நுவரெலியா மாவட்ட செயலாளரின் கவணத்திற்கு கொண்டு செல்லவில்லை, எங்களின் பிரச்சனைகளை அரசியல் தலைவர்களும் கண்டுகொள்வதில்லை எனவும்  தெரிவித்துள்ளனர்

மக்களின் அடிப்படை வசதிகள் செய்துதரக்கூடிய உரிய அரச, அரச சார்பற்ற நிறுவன அதிகாரிகளின் கவணத்திற்கு பொது மக்கள் கொண்டு வருகின்றனர்.

எங்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தாருங்கள் என கோட்டுக்கொள்கின்றனர்.


Leave a Reply