துப்பாக்கிப் பிரயோக முயற்சி தோல்வி – நபரை வாளால் வெட்டிய கும்பல்..! பரபரப்புச் சம்பவம் samugammedia

ஹம்பாந்தோட்டை, பதகிரிய பிரதேசத்தில் சொகுசு காரில் வந்த இருவர் செவ்வாய்க்கிழமை (11) காலை 44 வயதுடைய நபர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டும் அந்த முயற்சி தோல்வியடைந்ததையடுத்து, அவரை வாளால் வெட்டியுள்ளதாக ஹம்பாந்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர். 

ஹம்பாந்தோட்டை, பதகிரியவைச் சேர்ந்த 44 வயதான ரத்நாயக்க மனம்பேரி சமிந்த என்பவர் மீதே வாள்வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

சம்பவத்துடன் தொடர்புடைய வெள்ளை நிற சொகுசு கார் லுணுகம்வெஹர பகுதியில் கைவிடப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

Leave a Reply