கம்பஹா மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் மீது பொலிஸார் தாக்குதல்! samugammedia

கம்பஹா மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் கம்பஹா பொலிஸில் முறைப்பாடு செய்யச் சென்றபோது பொலிஸார் தம்மை தாக்கியதாக கூறி, சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அனுமதிக்கப்பட்டுள்ளவர் சமித திஸாநாயக்க என்பவராவார்.

குடும்ப விவகாரம் தொடர்பாக முறைப்பாடு வழங்க பொலிஸ் நிலையத்துக்குச் சென்றதாகவும், தனது முறைப்பாட்டைப் பதிவு செய்ய அதிக நேரமானதால், இதுகுறித்து இருமுறை கேட்டதாகவும், பின்னர் பொலிஸ் நிலைய உயரதிகாரிக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்ததாகவும், அதன் பின்னரே தனது முறைப்பாட்டை பதிவு செய்ய தன்னை அழைத்ததாகவும் தாக்கப்பட்டவர் கூறுகிறார்.

இதன்போதே பல பொலிஸார் தன்னைத் தாக்கியதாகவும் அவர் கூறுகிறார். 

தாக்குதலினால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாகவும் திஸாநாயக்க தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கம்பஹா பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் ரோஹன தெரிவித்தார்.

Leave a Reply