திருகோணமலையில் புதையல் தோண்டிய சந்தேகத்தின் பேரில் இருவர் கைது! samugammedia

புதையல் தோண்டிய சந்தேகத்தின் பேரில் திருகோணமலை- தம்பலகாமம் பொலிஸ் பிரிவிற்குற்பட்ட பகுதியில் இரண்டு சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் (12) மாலை இடம்பெற்றுள்ளது.

தம்பலகாமம் 96 ஆம் கட்டை பகுதியிலுள்ள வீட்டில் கிணறு தோண்டுவதைப் போன்று நாடகமாடி புதையல் தோண்டிக் கொண்டிருந்த வேளையில் இரண்டு சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

எஸ் ஐ எஸ் என்று அழைக்கப்படும் அரச புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக கந்தளாய் பிராந்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது  கல் துளைக்கும் இயந்திரத்துடன் இரண்டு சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் முள்ளிப்பொத்தானை- சாலியபுர -பகுதியைச் சேர்ந்த 55 மற்றும் 60 வயது உடையவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து கல் துளைக்கும் இயந்திரம் மற்றும் சில ஆயுதப் பொருட்கள் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்களை கந்தளாய் நீதிமன்றில் (13) ஆஜர் படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.


Leave a Reply