விற்பனைக்குத் தயாரான 5கோடி பெறுமதியான முக்கிய பொருள்..! அறுவர் கைது….!samugammedia

மிகவும் அரிய வகை பெறுமதியான வலம்புரிச் சங்கை 5 கோடிக்கும் அதிகமான விலைக்கு விற்க முயன்ற இரண்டு பெண்கள் உட்பட அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜா எல பிரதேசத்தில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கிரிந்திவளை, நிட்டம்புவ, மருதானை மற்றும் அங்கொட பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்த வலம்புரிச் சங்கு விற்பனைக்குத் தயாராக இருப்பதாகப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பிரகாரம், மேற்கொண்ட சுற்றிவளைப்பில் குறித்த 6 பேரும் கைது செய்யப்பட்டனர் என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Leave a Reply