
காத்தான்குடி அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கை பொறுப்பு மற்றும் பத்ரிய்யா ஜும்ஆப் பள்ளிவாசல் ஆகியவற்றின் தலைவரான ஏ.ஜே.அப்துர் ரவூப் மௌலவி முன்வைத்து வரும் மார்க்க கொள்கை தொடர்பில் அவருடன் பேச்சுவார்த்தை நடத்த அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தயாராக உள்ளதாக உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். றிஸ்வி முப்தி தெரிவித்துள்ளார்.





