தேயிலை தொழிற்சாலை வடிகால் பகுதியில் மீட்கப்பட்ட சடலத்தால் பரபரப்பு..!samugammedia

மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள காட்டு மஸ்கெலியா தோட்டத்தை சேர்ந்த 52 வயது உடைய மூன்று குழந்தைகளின் தந்தை உதவி வெளிக்கள உத்தியோகத்தர் செமுவேல் வின்சென்ட் என்பவர் அதே தோட்டத்தில் உள்ள தேயிலை தொழிற்சாலை அருகில் உள்ள வடிகால் பகுதியில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். இந் நிலையில் மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து மஸ்கெலியா பொலிஸ் நிலைய உதவி அதிகாரி ஆனந்த பத்மசிறீ மற்றும் பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், அந்த பகுதியை பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தி விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் ஹட்டன் நீதிமன்ற நீதிவான் வந்து பார்வை இட்ட பின்னர் உடலம் கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

Leave a Reply