திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கும், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆகியோருக்குமிடையிலான சந்திப்பு கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்றது.
இதில் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ், முஸ்லிம்,சிங்கள ஊடகவியலாளர்கள் 30 பேர் கலந்து கொண்டனர்.
இதன்போது பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் குறைந்தளவு ஊதியத்திற்காக அர்ப்பணிப்போடு கடமையாற்றும் திருகோணமலை மாட்ட ஊடகவியலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு சுயதொழில் முயற்சியொன்றை ஏற்படுத்திக் கொடுக்கவுள்ளதாகவும் அதற்காகவே இவ் கலந்துரையாடலை ஏற்படுத்தியதாக கிழக்கு மாகாண ஆளுநர், திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.
முதற்கட்டமாக திருகோணமலை மாவட்டத்தில் 30 ஊடகவியலாளர்களை தெரிவு செய்துள்ளதாகவும் அடுத்த கட்டம் மற்றைய ஊடகவியலாளர்களையும் இவ் உதவித் திட்டத்தில் இணைத்துக் கொள்ளவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஊடகவியலாளர்களின் நலனில் அக்கரை கொண்டு இவ் வேலைத்திட்டத்தை ஆரம்பித்தமைக்காக திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு கிழக்கு மாகாணஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு நன்றிகளை தெரிவித்தனர்.






