நாட்டை உலுக்கிய தாய் மற்றும் குழந்தை படுகொலை..!சந்தேகநபர் கைது..!samugammedia

அகுருவாதோட்டையில் இளம் தாய் மற்றும் மகளை படுகொலை செய்த பிரதான சந்தேகநபரை அகுருவத்தோட்ட பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர் வரகாகொட் சல்காஸ் மாவத்தை பகுதியிலுள்ள அவரது வீட்டிற்கு வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று சனிக்கிழமை காலை அங்குருவாதொட்ட பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் ஆனந்த சில்வா தலைமையிலான குழுவினர் அங்கு திடீர் சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.

எனினும் குறித்த சந்தேக நபர் வீட்டில் காணப்படாத நிலையில், அதன் பின்பகுதியிலும் அதனைச் சுற்றியிருந்த காடுகளிலும் மேற்கொள்ளப்பட்ட முழுமையான தேடுதலின் போது சந்தேக நபர் வாழை மரங்களுக்குப் பின்னால் ஒளிந்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பின்னர் அவரை துரத்திச் சென்று பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தர்ப்பத்தின் போது சந்தேக நபர் பெரிய கத்தரிக்கோல் போன்ற கூரான ஆயுதத்தால் பொலிஸ் அதிகாரியை பல தடவைகள் தாக்க முற்பட்ட போதும், தோல்வியின் காரணமாக அவர் தனது மார்பில் பல தடவைகள் கத்தியால் குத்திக்கொண்டுள்ளார்.

இதையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஹொரணை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ள நிலையில் அகுருவத்தோட்ட பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply