பாடசாலை கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் 10 பேர் உயிரிழப்பு

சீனாவில் பாடசாலைக் கட்டடமொன்றின் கூரை இடிந்துவீழ்ந்ததால் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஹேய்லோங்ஜியாங் மாகாணத்திலுள்ள குய்குய்ஹார் நகரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இன்று அதிகாலை வரை 14 பேர் இடிபாடுகளிலிருந்து அகற்றப்பட்டுள்ளனர் என அரச ஊடகங்கள் தெரிவி;த்துள்ளன.

இவர்களில் நால்வர் உயிரிழந்து காணப்பட்டதாகவும் மேலும் 6 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்பு நடவடிக்கைகளில் 39 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 160 தீயணைப்பு வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேற்படி சம்பவம் தொடர்பில், கட்டங்களுக்குப் பொறுப்பான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

 

Leave a Reply