ஐ எஸ் ஐ எஸ் பயங்கரவாத சந்தேகநபர்களின் நிதி – சிவில் சமூக செயற்பாட்டாளர் வெளியிட்ட தகவல்! samugammedia

ஐ எஸ்ஐஎஸ் பயங்கரவாத சந்தேக நபர்களின் பெருமளவான நிதிகள் ஊடாக மட்டக்களப்பு சிறைச்சாலையில் பல்வேறு புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டதாக சிவில் சமூக செயற்பாட்டாளரான வி.லவக்குமார் தெரிவித்துள்ளார்.

இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன் சிறைச்சாலையில் அதிசொகுசா வாழ்ந்ததாகவும் அங்கு குண்டுவெடிப்புக்கான திட்டம் தீட்டப்பட்டதாக அவரது முன்னாள் செயலாளர் தெரிவித்த விடயங்களை மறுக்கமுடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்று மாலை மட்டு. ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

தனது சகோதரனை பிள்ளையான் குழுவே கடத்திச்சென்று காணாமல்ஆக்கியதுடன் தனக்கும் பல்வேறு அச்சுறுத்தல்களை விடுத்ததாக இதன்போது ஊடகவியலாளர் தேவபிரதீபன் தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *