ஜனாதிபதி மாளிகையை தனியார் நிறுவனத்திற்கு வழங்கியமை சிங்களக் குடியேற்றம் செய்வதற்கே…! தமிழ் தேசிய கட்சிகள் குற்றச்சாட்டு…! samugammedia

கடந்த 33 வருடங்களுக்கு மேலாக உயர்பாதுகாப்பு வலயமாக காணப்படும் பிரதேசத்திற்குள் அமைக்கப்பட்டுள்ள ஐனாதிபதி மாளிகை தற்போது தனியார் நிறுவனம் ஒன்றிற்கு 50 வருட கால பகுதிக்கு குத்தகைக்கு வழங்கி விட்டு பின்னர் அப்பகுதியில் மெல்ல மெல்ல சிங்களக்குடியேற்றம் செய்வதற்காகவே என தமிழ் தேசிய கட்சிகளின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சியில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு  கருத்து தெரிவிக்கையிலேயே அவர்கள் இதனை தெரிவித்தார்.

அதேவேளை இந் நடவடிக்கையை ஒருபோதும் அனுமதிக்க முடியாது எனவும் இப்பகுதியில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். அவர்களுடனும் இது தொடர்பாக எந்த வித கலந்துரையாடல்களும் மேற்கொள்ளப்படாமல் ஜனாதிபதி அவர்கள் தன்னிச்சையாக எடுக்கப்படுகின்ற முடிவுகளுக்கு தம்மால் ஒத்துழைப்பு வழங்க முடியாது எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply