பசறை தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து தாம் நீக்கப்படவில்லை…! வடிவேல் சுரேஷ் விளக்கம்…!samugammedia

பசறை தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் நீக்கப்பட்டுள்ளதுடன் புதிய அமைப்பாளராக நேற்றையதினம் ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளர் லெட்சுமணன் சஞ்சய் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் பசறை தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து தாம் நீக்கப்பட்டமை தொடர்பில் கருத்து தெரிவித்த வடிவேல் சுரேஷ்,

ஐக்கிய மக்கள் சக்தியின் பசறை தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து தாம் நீக்கப்படவில்லை எனவும் இணை அமைப்பாளர் ஒருவரையே கட்சி நியமித்துள்ளது எனவும் தெரிவித்தார்.

 

அதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் பசறை தொகுதிக்கான புதிய அமைப்பாளராக லெட்சுமனார் சஞ்சய்,  கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவால் நியமிக்கப்பட்டு ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகத்தில் வைத்து நியமனக் கடிதம் தனக்கு வழங்கிவைக்கப்பட்டது என லெட்சுமனார் சஞ்சய் தெரிவித்துள்ளார்.

Leave a Reply