யுக்தியவை நிப்பாட்டுங்கள், கஞ்சாவை ஊக்குவியுங்கள் – வலியுறுத்திய தேரர்

கஞ்சா பாவனையை சட்ட பூர்வமாக்குவதற்கு  முன்னுரிமை வழங்குமாறு கோரிக்கை விடுப்பதாக ஜனசேத பெரமுனவின் தலைவர் பத்தர முல்லை சௌரதன தேரர் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் எதிர்காலத்தில் அரசாங்கத்திடம் முறையான கோரி க்கையை முன்வைக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மதுபானங்கள் இல்லாத காலகட்டத்தில் சாமானியர்கள் கூட கஞ்சாவை பயன்படுத்தி யதாக தெரிவித்த அவர் கஞ்சா பயன்பாடு சிறப்பான உத்வேகத்தையும் வலிமையையும் தருவதுடன் இனத்தின் வளர்ச்சியையும் தருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

யுக்திய என்ற பெயரில் பொலிஸார் போதைப் பொருள் பாவனையாளர்கள் மற்றும் அதனை விநியோகம் செய்பவர் களை தேடி கைது நடவடிக்கை களை ஆரம்பித்துள்ள நிலையில் அந்த தேரர் இவ்வாறு கூறியுள்ளார்.

Leave a Reply