கிளிநொச்சி ஏ35 பிரதான வீதியின் தர்மபுரம் வைத்தியசாலைக்கு அருகில் வீதியோரமாக நின்ற மரம் கடும் மழை காரணமாக வீதியில் குறுக்கே விழுந்ததில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த தருமபுர பொலிசார் வீதியின் குறுக்கே விழுந்த மரத்தினை உடனடியாக அப்பகுதியில் இருந்து அகற்றி மீண்டும் போக்குவரத்து சுமுகமாக மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொண்டனர்.
மரம் விழுந்ததன் காரணமாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது, மின் கம்பமும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது