வெளிநாட்டு தொழில்வாய்ப்புக்கள் இன்னும் வழங்கப்படவில்லை என தெரிவித்து இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு முன்பாக சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த ஆர்ப்பாட்டம் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளது.
தமக்கு கொரிய தொழில் வாய்ப்புகள் வழங்கப்படவில்லை என கூறியே இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, கோஷங்களையும் எழுப்பினர்.
மேலும் வேலை வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் எனக் கூறி, பணியகம் முன் தேங்காய்களை உடைத்து தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
அத்துடன், இதற்கான தீர்வை எதிர்வரும் பத்து நாட்களுக்குள் வெளியிடுமாறு ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்தனர்.