இலங்கையின் பத்தாவது நாடாளுமன்றத்துக்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான தேர்தலில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று முற்பகல் மருதானை, பஞ்சிகாவத்த – அபயசிங்காராமவில் தனது வாக்கைப் பதிவு செய்தார்.
வாக்களித்த பின்பு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, தேசிய மக்கள் சக்தி வலுவான நாடாளுமன்றத்தை அமைக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
மக்களுக்கு ஏற்புடையதான சட்டங்களை நிறைவேற்றி, புதிய நாடாளுமன்ற கலாசாரத்தை உருவாக்க முடியும் என்றும், தேசிய மக்கள் சக்தி வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கை ஒன்றிணைக்கும் ஆட்சியை அமைக்கும் என்றும் ஜனாதிபதி உறுதியளித்தார்.