அமெரிக்க முத்தமிழ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும், தமிழ் இலக்கிய உலகில் ‘தன்முனை’ கவிதைகளின் தந்தை என்று போற்றப்படுபவருமான முனைவர் கா. நா. கல்யாணசுந்தரத்திற்கு மிகச் சிறப்பான கௌரவிப்பு நிகழ்வு நடைபெற்றது.
இலங்கை வருகை தந்திருந்த அவருக்கு, கடந்த ஏப்ரல் 5, 2026 அன்று Ramboda Tea Bush விருந்தகத்தில் வைத்து இச்சிறப்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
முனைவர் கா. நா. கல்யாணசுந்தரம் அவர்களின் இலக்கியப் பணிகளையும், கல்விச் சேவையையும் பாராட்டி இந்த கௌரவம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் திருமதி கா. அருள்செல்வி , புலவர் ஜோதி குமார்
கலந்து கொண்டனர்.
இலக்கியத் துறையில் புதிய முயற்சிகள் மற்றும் தமிழ் மொழியின் உலகளாவிய வளர்ச்சி குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.





