பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகமாலை பகுதியில் நேற்று முதல் காணாமல் போனவர் இன்று (15) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
முகமாலை, பொந்தர் குடியிருப்புப் பகுதியில் இன்று முதல் காணாமல் போனவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை, இதனால் உறவினர்கள் நண்பர்கள் தேடியபபோது கிராமத்திற்கு அருகமையில் சடலமாகக் இனங்காணப் பட்டுள்ளார்.
சடலமாக மீட்கப்பட்டவர் முகமாலை வடக்கு பகுதியைச் சேர்ந்த 71 வயதுடைய இளையவன் நல்லதம்பி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து பளை பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளர்.
சம்பவம் தொடர்பாக பளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.
இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




