தனிமையில் வசித்து வந்த மீனவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கந்தளாய் குளத்தின் தங்கஸ்துவ பகுதியில் இன்று (15) காலையில் குறித்த மீனவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
66 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த மீனவர் விவாகரத்து ஆகி 45 வருடங்களாக கந்தளாய் குளத்தின் தங்கஸ்துவ பகுதியில் மீன் வாடியில் தனிமையில் வசித்து வந்ததுடன் அன்றை தினம் மது போதையில் இருந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




