அரச பேருந்துகளில் பயண சீட்டு வழங்கப்படுவதில்லை என பயணிகள் புகார்!

மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் மஸ்கெலியா பகுதியில் அரச பேருந்துகளில் பயண சீட்டு வழங்கப்படுவதில்லை என பயணிகள் புகார் அளித்துள்ளனர்.

நல்ல தண்ணி முதல் கொழும்பு வரை அதிகாலை வேளையில் அவிஸ்சாவலை அரச பேருந்து நிலையத்திற்கு உரித்தான பேருந்து மற்றும் ஹட்டன் முதல் சாமிமலை மாலை வேளையில் செல்லும் அரச பேருந்துகளில் இவ்வாறான செயலை செய்து வருகின்றனர் என அப் பேருந்துகளில் பயணம் செய்த பயணிகள் புகார் தெரிவித்தனர்.

இது குறித்து சம்பந்தப்பட்ட ஹட்டன் அரச பேருந்து நிலைய அதிகாரிகள் மற்றும் அவிஸ்சாவலை அரச பேருந்து நிலைய அதிகாரிகள் உடன் கவணம் செலுத்தி பயணிகளுக்கு முறையாக பயணசீட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அத்துடன் அடிக்கடி இப் பகுதியில் பயனசீட்டு பரிசோதனைகள் மூலம் பரீசீலனை மேற்கொள்ள வேண்டும்.

Leave a Reply