தமிழ் தேசியக் கட்சிகள் ஒன்று பட வேண்டும்-மு.பா. உ கோவிந்தன் கருணாகரம்!

வடகிழக்கிலே தமிழ் தேசிய கட்சிகளுக்கு 10 பாராளுமன்ற உறுப்பினர்கள்தான் தற்போது இருக்கிறார்கள். ஆனால் தேசிய மக்கள் சக்திக்கு கட்சிக்கு 12 பாராளுமன்ற உறுப்பினர்கள் வடகிழக்கில் இருக்கின்றார்கள் இதையாவது உணர்ந்து கொண்டு தமிழ் தேசியக் கட்சிகள் ஒன்று பட வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பிர் கோவிந்தன் கருணாகரம்(ஜனா) தெரிவித்துள்ளார்.

மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திற்குட்பட்ட செட்டிபாளையத்தில் வெள்ளிக்கிழமை(17) நடைபெற்ற விளையாட்டரங்கு திறப்பு விழா நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த காலங்களில் மாறி மாறி இந்த நாட்டை ஆட்சி செய்து கொண்டிருந்த அரசாங்கங்கள்போல் தான் இந்த அரசாங்கமும் நடந்து கொண்டிருக்கின்றது. இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வரும் போது பல வாக்குறுதிகளை கொடுத்து வந்தார்கள். 

குறிப்பாக வடகிழக்கு தமிழ் மக்களுக்கு அவர்களது வாக்குகளைப் பெறுவதற்காக வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. 

குறிப்பாக புதிய அரசியல் அமைப்பு ஒன்றை உருவாக்கி அதன் மூலமாக புரையோடிப் போயிருக்கின்ற இன பிரச்சனைக்கு தீர்வு காண்போம் என்றார்கள். 

சிறையிலே 35 வருடங்களுக்கு மேலாக வாடிக் கொண்டிருக்கின்ற அரசியல் கைதிகளை விடுதலை செய்வோம் என்றார்கள். 

இலங்கை பாதுகாப்பு படையினரால் அபகரிக்கப்பட்டு கையகப்படுத்தப்பட்டுள்ள கானிகளை விடுவிப்போம் என்றார்கள்.

மதரீதியாக வடகிழக்கிலே விகாரைகள் அமைக்கப்பட மாட்டாது, பௌத்த மயமாக்கல் நடைபெற மாட்டாது என்றார்கள். ஆனால் எதுவுமே இங்கு நடைபெற்றதுதாக இல்லை அவர்களது வாக்குறுதிகள் காற்றிலே பறந்து விட்டதாகத்தான் இருக்கின்றன.

கடந்த காலங்களிலே இந்த நாட்டை ஆண்ட அரசுகள் போன்று தான் தற்போதைய அரசும் அதே பாணியில் இந்த நாட்டை ஆண்டு கொண்டிருக்கின்றார்கள். இதில் எந்த மாற்று கருத்தும் இல்லை மாற்றமும் ஏற்பட்டதாக தெரியவில்லை.

தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கட்சிகளோ இன்று வரை திருந்தாமல் இருப்பது என்பது தமிழ் மக்களுக்கு செய்யும் ஒரு துரோகமாகவேதான் நான் பார்க்கின்றேன்  2009இற்கு முன்பு வடகிழக்கிலே ஆய்யுதப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது தமிழ் மக்களிடையே ஒற்றுமை இருந்தது அந்த ஒற்றுமையை ஏற்படுத்தப்பட்டிருந்தது. அது கட்டாயம் தேவையான ஒன்றாக இருந்தது.

2009 இற்கு பின்னர் தமிழ்த் தேசியக் கட்சிகள் தாங்கள்தான் தமிழ் மக்களுடைய தலைவர்கள் என்று பல கூறுகளாக பிரிந்து இருக்கின்றார்கள் இது உண்மையிலேயே ஏற்றுக் கொள்ளக் கூடிய விடயம் அல்ல.

 

நானும் நீண்ட காலமாக இந்த அரசியல், போராட்டம் என்பவற்றில்  40 வருடங்களுக்கு மேலாக இருப்பவன். இருந்தாலும் நான் உட்பட தமிழ் தேசியக் கட்சிகள் ஒன்றுபட்டு எங்களுடைய மக்களுக்காக அரசியல் ரீதியாக போராடவில்லை, ஒன்றுபட்டு செயற்படவில்லை எனவேதான் கடந்த பாராளுமன்றத் தேர்தலிலே வடக்கு கிழக்கிலே தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு தமிழ் மக்கள் கூடுதலாக வாக்களித்து இருந்தார்கள்.

 

வடகிழக்கிலே தமிழ் தேசிய கட்சிகளுக்கு 10 பாராளுமன்ற உறுப்பினர்கள்தான் தற்போது இருக்கிறார்கள். ஆனால் தேசிய மக்கள் சக்திக்கு கட்சிக்கு 12 பாராளுமன்ற உறுப்பினர்கள் வடகிழக்கில் இருக்கின்றார்கள் இதையாவது உணர்ந்து கொண்டு தமிழ் தேசியக் கட்சிகள் ஒன்று பட வேண்டும்.

 

இன்று தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை அனைத்துக் கட்சிகளும் ஒன்றாக ஒரே குரலில் அது இராஜ தந்திர ரீதியாக இராஜதந்திரிகளுக்கு கூறுவதாக இருந்தாலும் சரி, இந்த நாட்டின் அரசுக்கு கூறுவதாக இருந்தாலும் சரி, சர்வதேசத்திற்கோ ஐக்கிய நாடுகள் சபைக்கு கூறுவதாக இருந்தாலும் ஒரே தீர்வுத் திட்டமாக அந்த தீவுத்திட்டம் அனைவராலும் அனைத்து தமிழ் தேசிய கட்சிகளாலும் கூறப்பட வேண்டும் என்பதற்காக கொழும்பிலே தமிழ் சட்டத்தரணிகள் பேரவை ஒரு கூட்டத்தை நடத்திக் கொண்டு வருகின்றார்கள். இரண்டு கூட்டங்கள் நடைபெற்று முடிந்திருக்கின்றது. அந்த தமிழ் சட்டத்தரணிகள் சங்கத்தின் முயற்சி திருவினையாக்கும் திருவினையாக்கும் முயற்சிக்கு தமிழ் தேசிய கட்சிகள் தங்களுக்குள்ளே உள்ள வரட்டு கௌரவங்களை விடுத்து ஒன்றுபட்டு ஒரு தமிழ் மக்களுக்கான அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றக்கூடிய ஒரு தீர்வுத் திட்டத்தை உருவாக்குவதற்கு ஒத்துழைக்க வேண்டும் ஒத்துழைப்பார்கள் என நான் நினைக்கின்றேன்.

 

அதேபோன்று அரசியல் ரீதியாகவும் அனைத்து தமிழ் தேசிய சக்திகளும் ஒன்றுபட்டு 2009 இற்கு முன்னர் 2004 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலிலே எப்படி செயற்பட்டார்களோ அப்படி செயற்பட்டால் மாத்திரமே வடகிழக்கு வடகிழக்கில் இருக்கின்ற தமிழ் மக்களுக்கும் எதிர்காலம் உண்டு அல்லா போனால் என்ன நடக்கும் என்பதை நாங்கள் எல்லோரும் அறிவோம். என அவர் இதன்போது தெரிவித்தார்.

Leave a Reply