திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள சுற்றுலாத் துறை பகுதியாக கன்னியா வெந்நீருற்று கிணறுகள் காணப்படுகின்றன.
திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் இருந்தாலும் குறித்த கன்னியா வெந்நீரூற்றானது தொல் பொருள் திணைக்களத்தின் கீழே பராமரிக்கப்பட்டு வருவதுடன் உள் நுழைவு டிக்கட்டிலும் தொல்லியல் திணைக்களம் என்றே அச்சிடப்பட்டுள்ளது.
உள்ளூர் நபர் ஒருவருக்கு 100 ரூபாவும், வெளிநாட்டவர் ஒருவருக்கான டிக்கட் கொடுப்பனவாக 500 ரூபாவுமாக காணப்படுகிறது.
உள்ளூர் அதிகார சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காணப்படும் சகல வருமானங்களும் உரிய சபைகளுக்கே சொந்தமானதாக இருக்க வேண்டும் ஆனாலும் கன்னியா வெந்நீரூற்று வருமானம் தொல்பொருள் திணைக்களத்துக்கு சொந்தமாகியுள்ளது.
இது இவ்வாறு இருக்க குறித்த பகுதியில் சிவன் ஆலயம் ஒன்றும் காணப்படுவதுடன் அதனை அண்டின பகுதி கம்பிகளால் மறைக்கப்பட்டு உட் செல்ல தடை என கூறப்பட்டு தொல்லியல் பகுதி எனவும் அடையாளப்படுத்தியுள்ளனர்.
இவ்வாறாக உள்ளூராட்சி சபைகளுக்கான அதிகாரங்கள் எவ்வாறு சொல்லப்பட்டுள்ளதோ அது போன்று நடப்பத்தில்லை என சந்தேகிக்கப்படுகிறது.
சுற்றுலா பகுதி தளமாக இது காணப்பட்டாலும் சில உரிமைகள் இங்கு மறுக்கப்படுகிறது.
அதிகளவான உள்ளூர் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கன்னியாவை நோக்கி வருகை தருகின்றனர். இங்கு ஏழு கிணறுகள் காணப்படுவதுடன் சுடு தண்ணீரை கொண்டதாக அதிசயமாக பார்க்கப்படுகிறது.





