மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் பொறுப்பதிகாரி எஸ்.எஸ் புஷ்பகுமார அவர்களின் பணிப்புரைக்கு அமைய திடீரென வாகனங்களில் புகை பரிசோதனை.
இன்று 21 ம் திகதி மதியம் மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் சேவையில் ஈடு பட்டு வரும் பேருந்து, வேன்,பார ஊர்தி, முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள் போன்ற வற்றை திடீரென சோதனை இட்ட போது.
பாவனைக்கு உதவாத 12 பேருந்துகள் 07 வேன்கள் 06 பார ஊர்திகள் 02 மோட்டார் சைக்கிள்கள் 02 கெப்ரக வாகனங்கள் பாவனைக்கு உதவாத நிலையில் உள்ளது என அவற்றை ஒரு மாத காலத்திற்குள் திருத்தம் செய்து நுவரெலியா மாவட்ட வாகன போக்குவரத்து துறை அதிகாரி எம்,ஜீ’ சி, பண்டார அவர்களிடம் காட்ட வேண்டும் என உத்தரவிட்டு பிறப்பிடமாகக் பட்டு உள்ளது என மஸ்கெலியா பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.





