பெறுமதி மிக்க மரக் குற்றிகளுடன் ஒருவர் கைது

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரமந்தனாறு பகுதியில் சட்ட விரோதமான முறையில் அரச காட்டுக்குள் அத்துமீறி நுழைந்து எந்தவித அனுமதி பத்திரமுமின்றி பெறுமதி மிக்க முதிரை மரக் குற்றிகளை வெட்டி வேற பகுதிக்கு கொண்டு செல்ல முற்பட்ட சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தர்மபுரம் பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைவாக சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிசார் சந்தேக நபர் மற்றும் கப்ரக வாகனத்தில் ஏற்றப்பட்டிருந்த மரக்குத்திகளுடன் சந்தேக நபரை கைது செய்துள்ளார் 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் எதிர்வரும் 22.05.2026 அன்று கிளிநொச்சி நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்

Leave a Reply