கன்டர் வாகனத்துடன் மோதி நொறுங்கிய மோட்டார் சைக்கிள்; கிளிநொச்சியில் கோர விபத்து

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ9 வீதியில் கந்தசுவாமி ஆலயம் முன்பாக இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இவ்விபத்து இன்று மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தகவல்களின் படி, ஏ9 வீதியின் இருவழிப் பாதையிலிருந்து மாற்று வழிப் பாதைக்கு செல்ல முற்பட்ட கன்டர் ரக வாகனத்தில், டிப்போ சந்தியில் இருந்து கந்தசுவாமி ஆலய பகுதி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மோதியதாக கூறப்படுகிறது.

விபத்தின் தாக்கத்தால் மோட்டார் சைக்கிள் கன்டர் வாகனத்தின் பின்புற சில்லில் சிக்கியதுடன், வாகனம் கடுமையாக சேதமடைந்துள்ளது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்த நிலையில் உடனடியாக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply