பண்டாரவளை வர்த்தகத் தொகுதி வளாகத்தில் இயங்கி வந்த சட்டவிரோத சூதாட்ட விடுதி ஒன்று பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டு, 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பண்டாரவளை பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், இன்று (23) காலை மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே இந்த கைது இடம்பெற்றுள்ளது.
சோதனையின் போது சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்டவர்களை பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்





