முல்லைத்தீவு மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனைக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி ஒன்று இன்று (23) இடம்பெற்றுள்ளது.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட இளைஞர் கழக சம்மேளனம் இணைந்து ஏற்ப்பாடு செய்த குறித்த விழிப்புணர்வு பேரணியானது முல்லைத்தீவு மகா வித்தியாலத்திலிருந்து ஆரம்பமாகி முல்லைத்தீவு மாவட்டச் செயலகம் வரையில் சென்று நிறைவடைந்தது
உங்கள் எதிர்காலத்தை பறிக்கும் நச்சுப் போதைப்பொருளினை பயன்படுத்துவதை நிறுத்துங்கள் என்ற தொனிப்பொருளில் இடம்பெற்ற குறித்த விழிப்புணர்வு பேரணியில் எவ்வளவு குளித்தாலும் சிகரட் நாத்தம் போகாது, வேண்டாம் வேண்டாம் உயிர்க்கொல்லி போதை வேண்டாம்,போதையற்ற சமுதாயத்தை உருவாக்குவோம் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாதைகளை தாங்கியவுறும்
எதிர்ப்போம் எதிர்ப்போம் போதைப்பொருளை எதிர்ப்போம், அழிக்காதே அழிக்காதே இளைஞர்களை அழிக்காதே , இன்றைய இளைஞர்கள் நளைய தலைவர்கள்,என்ற பல்வேறு கோசங்களை எழுப்பியவாறும் குறித்த பேரணி இடம்பெற்றது
தேசிய இளைஞர் சேவைகள் மன்ற முல்லைத்தீவு மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஐயாத்துரை தவேந்திரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற குறித்த விழிப்புணர்வு பேரணியில் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற நிர்வாக பணிப்பாளர் மனுல சமல் பெரேரா, ஜெய்க்கா நிறுவன தொண்டர் அறற்றா சகமோற்றோ (arata sakamoto) தேசிய இளைஞர் சேவைகள் மன்ற வடக்கு மாகாண பணிப்பாளர் கே டி சி காமினி, கரைதுறைபற்று பிரதேச சபை தவிசாளர் திருமதி இமக்குலேற்றா புஸ்பானந்தன், முல்லைத்தீவு மகா வித்தியாலய அதிபர் எஸ் மேகஜீவன், ஆசிரியர்கள் மாணவர்கள்,றகமா நிறுவன பணியாளர்கள் இளைஞர் கழக மாவட்ட மற்றும் பிரதேச சம்மேளன பிரதிநிதிதிகள் மற்றும் இளைஞர் யுகதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.





