கரவெட்டி பிரதேச செயலகத்தில் பெண் தொழில் முயற்சியாளர்கள் கௌரவிப்பு..!

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச செயலகத்தின் சிறுவர் மற்றும்  பெண்கள்  பிரிவினால்  ஏற்பாடு செய்யப்பட்ட  சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு பெண் தொழில்  முயற்சியாளர்கள் கௌரவிப்பு நிகழ்வானது  நேறைய  தினம் திங்கட்கிழமை (25.05.2026) காலை 9.30  மணியளவில்  வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் தலைமையில்  இடம் பெற்றது.

பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கிராமங்களில், பல்வேறு சவால்களுக்கு மத்தியில் சுயதொழில் துறையில் தடம் பதித்து, உள்ளூர் பொருளாதாரத்திற்கு பங்களிப்பு செய்து வரும் சிறந்த பெண் தொழில் முயற்சியாளர்கள்  இந் நிகழ்வில்  கௌரவிக்கப்பட்டனர்.

இந் நிகழ்வு ப்ரண்ட்ஸ் நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply