முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச சபைக்கான மாதாந்த சபை அமர்வு இன்றையதினம் இடம்பெற்ற போது சபை உறுப்பினர்களுக்கும், தவிசாளருக்கும் இடையிலான வாக்குவாதங்களை தொடர்ந்து தவிசாளர் சபையினை ஒத்திவைத்துவிட்டு வெளிநடப்பு செய்ததனால் சபை அமளி துமளியாகிய மாறிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச சபைக்கான மாதாந்த சபை அமர்வானது இன்றையதினம் (26.05.2026) தவிசாளர் இமக்குலேற்றா புஷ்பானந்தம் தலைமையில் பிரதேசசபை மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது. இதன்போது கரைதுறைப்பற்று பிரதேச சபையின் செயலாளருக்கு இடம் மாற்றம் வழங்கியமை தொடர்பில் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் தவிசாளரால் ஒரு சில தினங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்ட குரல் பதிவு தொடர்பிலும், சபை செயற்பாடுகள் தொடர்பாகவும் எழுந்த விவாதத்தில் சபையில் குழப்பநிலையை தொடர்ந்து தவிசாளர் பதில் கூறமுடியாமல் சபை அமர்வினை ஒத்திவைத்து விட்டு சபையில் இருந்து வெளியேறியதாக உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பில் சபையின் உறுப்பினர்கள் ஊடகங்களுக்கு பின்வருமாறு கருத்து தெரிவித்திருந்தனர்.
இன்றைய அமர்வு தவிசாளரின் இயலாமை காரணமாக கூட்டத்தை ஒத்திவைத்துவிட்டு வெளிநடப்பு சொய்துள்ளார். ஒரு தலைவன் எவ்வாறு நடாத்த வேண்டும் என்ற தன்மை இல்லாத காரணத்தினால் வெளியேறியுள்ளார். எங்களது கிராமம் தொடர்பில் பல பிரேரணைகளை நாம் கொடுத்துள்ளோம். அதனை நிறைவேற்ற முடியாத நிலையில் இருக்கின்றோம். இவ்வாறு போனால் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் செயற்பாடுகள் எப்படி அமையபோவதென்பது கேள்விக்குறியாக இருக்கின்றது.
இது சபை கூட்டமல்ல, கட்சி கூட்டம். கட்சிசார்ந்த வடவடிக்கை. இப்பிரதேசத்தை சார்ந்த தகுதிவாய்ந்த செயலாளர், தவிசாளரின் போக்கிற்கு இசைந்து போகாமையினால் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தவிசாளரின் பிழையான செயற்பாடாகும்.
தவிசாளர் தொடர்பான குரல் பதிவு உறுப்பினரால்வெளிப்படுத்தியமைக்கான காரணம் செயலாளரின் இமாற்றம் தொடர்பில் இங்கு உள்ள 92 அமைப்புகளின் கையெழுத்துடன் செயலாளரை மாற்ற வேண்டாம் என ஆளுநர், பிரதம செயலாளர் உள்ளூராட்சி ஆணையாளர் ஆகியோரை சந்தித்து கடிதம் வழங்கியிருந்தோம். ஆனால் தவிசாளர் NPP உறுப்பினர் ஒருவருடன் கதைத்த குரல் பதிவு தவிசாளரால் வட்சப் குழுவிலே பகிரப்பட்டது. பகிரப்பட்டதன் காரணம் செயலாளர் மாற்றம் தொடர்பில் சென்ற எம்மை அவமானப்படுத்துவது, மற்றையது ஆளும் கட்சி நினைத்ததை செய்யும் அதிகாரம் இருக்கின்றது என்பது தெளிவாக தெரிகின்றது.
வெளியான குரல்பதிவில் உள்ளூராட்சி ஆணையாளர் இரவுஸ11.30 மணிக்கு தொலைபேசி அழைப்பெடுத்து தவிசாளரை இனி நன்றாக தூங்கலாம் என கூறியதாகவும், பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் ஆளுநரிடம் சென்றும் அவரது கருத்தை ஆளுநர் எடுக்கவில்லை எனவும் மாற்றம் செய்யப்பட்ட தவிசாளரை நாயே எனவும் தவிசாளர் கூறியிருந்தார்.
இவர்கள் ஏனைய கட்சியினை புறம் தள்ளுகின்றார்களா? அல்லது ஊழல் நடவடிக்கையில் ஈடுபடுகின்றார்களா? என்ற சந்தேகம் எமக்கு ஏற்பட்டுள்ளது.
ஆதனை தவிசாளரிடம் கேட்ட போது தவறுதலாக அனுப்பட்டது என கூறியிருந்தார். ஆனால் தவறுதலாக அனுப்பப்பட்டால் எம்மிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோரியிருக்கலாம். ஏனெனில் எம்மை அவமதிக்கும் செயலையே செய்துள்ளார்.
இங்கு நடப்பது மக்கள் அரசியல் அல்ல, அது கட்சி அரசியல் தவிசாளர் பேசி வெளிவந்த குரல்பதிவு எமது உறுப்பினர்களின் குழுவில் பகிரப்பட்டது. அது தொடர்பில், நாளாந்த சபையின் வேலை தொடர்பில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாத நிலையில் தவிசாளர் சபையிலிருந்து வெளியேறியுள்ளார் என உறுப்பினர்கள் மேலும் தெரிவித்தனர்.





