19 சீனப் பிரஜைகளின் வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை சட்டவிரோதமான முறையில் வைத்திருந்த குற்றச்சாட்டில், வெலிக்கடை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரான குறித்த பொறுப்பதிகாரியை, மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வெயாங்கொடை பகுதியில் வைத்து கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.




