புனித அந்தோணியார் திருவிழா… கொச்சிக்கடையில் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்

கொழும்பு கொச்சிக்கடையில் அமைந்துள்ள புனித அந்தோணியார் திருத்தலத்தின் வருடாந்திர திருவிழாவை முன்னிட்டு இன்று (13) விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருச்சொரூப பவனி இன்று பிற்பகல் 2.30 மணி முதல் இரவு 10.00 மணி வரை நடைபெறவுள்ளது. 

புனித அந்தோணியார் சிலையை ஏந்திய இந்த ஊர்வலம் கொட்டாஞ்சேனை மற்றும் கரையோர பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பல முக்கிய வீதிகள் வழியாகச் செல்லவுள்ளதால், அந்த பகுதிகளில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன.

இதனால், வழக்கமாக இந்த வீதிகளை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் மாற்று பாதைகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அதன்படி, மோதரையிலிருந்து புறக்கோட்டை நோக்கிச் செல்லும் வாகனங்கள் ஹெட்டியாவத்தை சந்தியில் இடதுபுறம் திரும்பி, ஜோர்ஜ் ஆர்.டி. சில்வா மாவத்தை வழியாக ஆமர் பாபர் சந்தியை அடைய முடியும்.

புறக்கோட்டையிலிருந்து மோதரை நோக்கிச் செல்லும் வாகனங்கள் சீனா வீதி, பிரதான வீதி, கேஸ்பஹ சந்தி, ஆட்டுபட்டித் தெரு வீதி (ஸ்ரீ ரத்னஜோதி சரவணமுத்து மாவத்தை), மகா வித்தியாலய மாவத்தை, கடிகாரக் கோபுர சுற்றுவட்டம் மற்றும் ஆமர் பாபர் சந்தி வழியாக பயணிக்க முடியும்.

திருவிழாவிற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் பொலிஸாரின் அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Leave a Reply