திருகோணமலை கடற்கரையோர புத்தர் சிலை வைப்பு வழக்கு ஒத்திவைப்பு!

திருகோணமலை கடற்கரையோர புத்தர் சிலை வைப்பு வழக்கு எதிர்வரும் ஜூலை மாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

திருகோணமலை பிரதான டச்பே கடற்கரை பகுதியில் கடற்கரையில் இருந்து சுமார் 11 மீற்றருக்கு உட்பட்ட பகுதியில் கடந்த வருடம் 2025 நவம்பர் மாதம் 16, 17ஆம் திகதிகளில் சட்ட விரோதமான முறையில் கட்டுமானத்தை மேற்கொண்டார்கள் எனவும் புத்தர் சிலையை நிறுவி குழப்பத்தை ஏற்படுத்த முயற்சித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் திருகோணமலை துறைமுக பொலிஸாரினால் கடலோரப் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் 28 (01) மற்றும் 14 (01) போன்ற சட்ட விதிகளுக்கு அமைவாக திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் 17.11.2025 அன்று வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இன்று (17) வழக்கு மீண்டும் மன்றத்தில் எடுக்கப்பட்ட நிலையில் வழக்கானது எதிர்வரும் 08.07.2026 அன்று மீண்டும்  நீதிமன்றத்தில் விசாரணைசெய்யப்படவுள்ளது. 

Leave a Reply