சிறுமி வன்புணர்வு – விசாரணையை அடுத்து அதிரடியாக கைதான தந்தை!

சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். 

இந்தச் சம்பவம் அக்கரபத்தனை பிரதேச சபைக்குட்பட்ட டயகம பொலிஸ் பிரிவில் டயகம NLD தேசிய கால்நடைப் பண்ணையின் டேவிட் பாம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. 

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், 

16 வயதுடைய தனது மகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் 42 வயதுடைய தந்தை  இன்று (20) காலை  கைது செய்யப்பட்டார் என டயகம பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலையில்  அனுமதிக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் டயகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  

Leave a Reply