வேலணை பிரதேச சபையின் மக்கள் பிரதிநிதிகள், பதவிநிலை சமாதான நீதிவான்களாக இன்றையதினம் (23) உத்தியோகபூர்வமாகச் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.
ஊர்காவற்றுறை நீதிமன்றக் கட்டடத்தில், ஊர்காவற்றுறை நீதவான் கௌரவ அனீபா ரஜீவ் முன்னிலையில் இந்தச் சத்தியப்பிரமாண நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது.
22 உறுப்பினர்களைக் கொண்ட வேலணை பிரதேச சபையின் மக்கள் பிரதிநிதிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு, நீதவான் முன்னிலையில் தத்தமது பதவிகளுக்கான சத்தியப்பிரமாணத்தை மேற்கொண்டு அதற்கான ஆவணங்களில் கையொப்பமிட்டனர்.
இனிவரும் காலங்களில் பொதுமக்களுக்கான சான்றுப்படுத்தல்கள், அவசர தேவைகள் மற்றும் பிரதேச மட்டத்திலான மக்கள் நலச் சேவைகளை இன்னும் விரிவாகவும், சட்டபூர்வ அதிகாரத்துடனும் முன்னெடுப்பதற்கு இந்த நியமனம் தங்களுக்குப் உறுதுணையாக அமையும் எனச் சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட சபை உறுப்பினர்கள் இதன்போது தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது





