வவுனியாவில் உலக சுற்றாடல் தின நிகழ்வும் அறுவடை சஞ்சிகை வெளியீடும்!

வடக்கு மாகாண விவசாய அமைச்சும் வவுனியா மாவட்ட செயலகமும் இணைந்து நடாத்திய உலக சுற்றாடல் தின நிகழ்வும் அறுவடை சஞ்சிகை வெளியீடும் வவுனியா மாநகரசபை மண்டபத்தில் இன்று காலை இடம்பெற்றது.

வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் சண்முகராஜா சிவஶ்ரீ தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முதன்மை அதிதியாக வவுனியா மாவட்ட செயலாளர் பி.ஏ.சரத்சந்திர கலந்துகொண்டார். 

சிறப்பு அதிதியாக வவுனியா பல்கலைகழகத்தின் துணைவேந்தர் அ.அற்புதராஜா கலந்துகொண்டார்.

முன்னதாக வவுனியா நகரசபை வாயிலில் இருந்து விருந்தினர்கள் ஊர்வலமாக மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்தனர். அதனை தொடர்ந்து கலைநிகழ்வுகள் உட்பட ஏனைய நிகழ்வுகள் இடம்பெற்றது.

 

Leave a Reply