நெடுந்தீவில் நேரகாலமின்றி மின்டை – பரீட்சைக்கு தயாராகும் மாணவர்கள் அவதி!

நெடுந்தீவு பிரதேச மின்சார விநியோகம் கடந்த சில நாட்களாக சுழற்சி முறையில் இடம்பெற்று வருவதனால் மாணவர்களும் மக்களும் பல சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக குற்றம் சட்டியுள்ளனர்.

பாவனையில் இருக்கும் இயந்திரங்களில் சிறிய இயந்திரம் ஒன்று திருத்தமுடியாதளவு பழுதடைந்துள்ளதால், அதனது வழமையான செயற்பாட்டு நேரங்கள் மட்டும் சுழற்சி முறையில் விநியோகிக்கப்படுவதுடன், வலு கூடிய இயந்திரம் இயங்கும் போது முழுமையாக விநியோகம் இடம்பெறுவதாகவும் தெரியவருகின்றது.

இதேவேளை மாற்றீடாக புதிய இயந்திரம் வரும்வரை இந்நிலை தொடருமாயின் எதிர்வரும் மாதம் க.பொ.த உயர்தர பரீட்சை, தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சை என்பன இடம்பெறவுள்ள நிலையில் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. 

அதேநேரம் தடையற்ற மின்சாரம் வழங்கப்படும் என்ற அனுர அரசின் வாக்குறுதியும் கேள்விக்குறியாகியுள்ளதாக மக்கள் விசனம் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply