திருகோணமலை மாவட்ட கிண்ணியா பிரதேச செயல பிரிவின் நடுவூற்று கிராமத்தில் அமையப் பெற்றுள்ள விசேட தேவையுடையவர்களுக்கான பகல் நேர பராமரிப்பு நிலைய கட்டிட திறப்பு விழா தொடர்பான கலந்துரையாடல் இன்று (13) திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. ஜி.எம்.ஹேமந்த குமார தலைமையில் மாவட்ட செயலக உப ஒன்று கூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.
இதில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) ஜெ.சிறீபதி மற்றும் கணக்காளர், பிரதம உள்ளக கணக்காளர்,மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய பிரதி பணிப்பாளர், திட்டமிடல் பணிப்பாளர்,பிரதி திட்டமிடல் பணிப்பாளர்,நிருவாக உத்தியோகத்தர் என பலரும் கலந்து கொண்டனர்.
குறித்த புதிய கட்டிட திறப்பு விழாவானது எதிர்வரும் 17.07.2026 நம் திகதி அன்று இடம்பெறவுள்ள நிலையில் அதற்கான முன்ஆயத்த ஏற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெற்றது.சமூக சேவைகள் திணைக்களத்தின் கீழ் குறித்த பகல் நேர கட்டிடம் கண்காணிக்கப்படவுள்ளது.
இதில் சமூக சேவைகள் அமைச்சர் மற்றும் சமூக சேவைகள் திணைக்கள பணிப்பாளர் என பலரும் இக் கட்டிட திறப்பு விழாவில் பங்கேற்கவுள்ளனர்.
விசேட தேவையுடைய மாணவர்களுக்கான கற்றல் கற்பித்தல் மூலமாக அவர்களை வலுப்படுத்தவும் இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் சமூக சேவைகள் திணைக்கள மாவட்ட உத்தியோகத்தர், பிரதேச செயலக சமூக சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர் என பலரும் கலந்து கொண்டனர்.




