
இலங்கை சினிமாவின் பிரபல நடிகர் பந்து சமரசிங்க இத்தாலி – மிலான் நகரில் உள்ள இலங்கை தூதரகத்தில் தூதுவராக நியமிக்கப்படவில்லை என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இத்தாலியின் மிலானோ நகருக்கான கொன்சியூலர் ஜெனரலாக சிங்கள திரைப்பட நடிகர் பந்து சமரசிங்க நியமிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
இதையடுத்து, வெளிவிவகார அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.
குறித்த பதவியில் இருந்த இலங்கையின் மூத்த பெண் பாடகியும் இசைக்கலைஞருமான நீலா விக்ரமசிங்க அண்மையில் மரணித்தமை குறிப்பிடத்தக்கது.





