நாட்டில் மேலும் சில மருந்து வகைகளின் விலைகளை 40 வீதத்தினால் அதிகரித்து அதிவிசேட வர்த்தமானியொன்று வெளியிடப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமனாவினால் இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
2015 ஆம் ஆண்டின் 05 ஆம் இலக்க தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகார சபை சட்டத்தின் கீழ் மருந்து விலைகள் இவ்வாறு அதிகரிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன் மூலம் அறுபது மருந்துகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் பெரசிட்டமோல், அட்டோவாஸ்டடின், எனலாபிரில், அஸ்பிரின் உள்ளிட்ட பல்வேறு மருந்து பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன.