நாளை கறுப்பு கொடிகளை ஏந்துங்கள்! அகிலவிராஜ் காரியவசம் வலியுறுத்து

நாளை நடைபெற உள்ள ஹர்த்தாலிற்கு ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவு அளிக்கும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

இன, மத பேதமின்றி மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.

காலி முகத்திடலில் ஆரம்பிக்கப்பட்ட இப் போராட்டம் இன்று வரை முடிவுறவில்லை.

ஆனால் அரசாங்கத்திற்கு இம் மக்கள் போராடுவது இன்னும் புரியவில்லை. அவர்கள்படும் துன்பம் தெரியவில்லை.

எனவே மக்கள் ஹர்த்தால் நடவடிக்கையை மேலும் வலுப்படுத்துங்கள் .அதே போல கறுப்பு கொடிகளை ஏந்துங்கள்.

இன்று மக்கள் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இலங்கை மக்களுக்கு உதவுவதற்காக இந்தியாவில் பணம் சேர்க்கப்படுகிறது. ஜப்பானில் பாலர் பாடசாலையில் பணம் சேர்க்கப்படுகிறது.

நமது நாட்டை அந்தளவிற்கு மோசமான நிலைக்கு தள்ளியுள்ளனர் என்றார்.

Leave a Reply