செயன்முறை பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான விசேட செய்தி

கொழும்பு,மே 06

2021 ஆம் கல்வியாண்டுக்கான கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைக்குரிய நடனம் உள்ளிட்ட செயன்முறை பரீட்சைக்கான திகதியை அறிந்துக்கொள்ள சனிக்கிழமை மாணவர்களுக்குரிய மத்திய நிலையத்திற்கு சமூகம் அளிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய சனிக்கிழமை மாணவர்கள் வருகை தந்து செயன்முறை பரீட்சைக்கான திகதி மற்றும் நேரத்தை ஒதுக்கிக்கொள்ளுமாறு பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக கல்விப்பொது தராதர உயர்தரத்திற்குரிய செயன்முறை பரீட்சைகள் தொடர்ந்தும் பிறப்போடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply